Pages

Subscribe:

Tuesday, August 30, 2011

Angry --- எரிச்சல்

அதிகபட்ச சில்லரை விலை என்று பாக்கெட் மீது அச்சிட்டு இருப்பது,அந்த விலைக்கு மேல் விற்கக்கூடாது என்பதற்காக. மேக்சிமம் ரீடெய்ல்
பிரைஸ் அல்லது எம்ஆர்பி என்பார்கள். முன்பெல்லாம் அதன்
அருகிலேயே உள்ளூர் வரிகள் தனி என்று சிறிய எழுத்தில்
சேர்த்திருப்பார்கள்.

கடைக்காரர் இஷ்டத்துக்கு விலை சொல்வார்.
கேட்டால் உள்ளூர் வரிகளை சேர்த்து என்பார். இதை பற்றி நிறைய
புகார்கள் வந்ததால் ஒட்டுமொத்தமாக அசிவி அச்சிடும் முறை
ல் அமலுக்கு வந்தது. இதில் எல்லா வரிகளும் அடக்கம்.
1990 உற்பத்தியாளரின் செலவுகள், லாபம், கடைக்காரருக்கான லாபம்,
இதர செலவுகள் அனைத்தையும் கணக்கிட்டு எம்ஆர்பி நிர்ணயம்
செய்யப்படுகிறது. இதனால்தான் பெரிய கடைகள் எம்ஆர்பியிலும்
பத்து முதல் 40 சதவீதம் வரை தள்ளுபடி செய்து விற்றாலும் லாபம்
சம்பாதிக்க முடிகிறது. பஸ் ஸ்டான்ட் கடைகள் and நெடுஞ்சாலைகளில் எல்லாம் அதிக பச்ச விலையை விட அதிகமாக விற்பனை செய்கிறார்கள்.
அப்படி இருந்தும் பெரும்பாலும் கடைகளில் MRP விலைக்கு மேல் இதை விற்கின்றனர். சொந்த தொழில் செய்தாலும் கௌரவமக பிட்சை எடுகிறார்கள்.

இப்படி பட்ட கடைகளுக்கு சங்கங்கள் எதற்கு???
 
விலையை விட அதிக விற்பனையா?
Complaint To துணை சட்டமுறை எடையளவு கட்டுப்பாடு அதிகாரி
நா.வே. கீதா
Just Dial to : 044-24321438, 044-24321525
 

அரசியல்: வீன் விளம்பரம் வேண்டுமா? ஊழலில் உட்கார்ந்து சாப்பிடனுமா?
இந்த மாதிரி நான் சொல்லவில்லை. இப்படி நம் தமிழிநாட்டில் இன்னமும் நடந்துக்கொண்டிருக்கிறது.  மக்களுக்கு வந்து சேரவேண்டிய அடிப்படை வசதிகூட கிடைக்கவில்லை. 5 ஆண்டுக்கு ஒருமுறை அரசியல் மாற்றம், தேவையில்லாமல் காரில் ஊர்வலம், ஒவ்வொரு ஏரியாவிலும் ஒரு புகார்பெட்டி அமைக்க படவேண்டும் (முதல்வனில் சொன்னது உங்களுக்கு மனதில் வருகிறதா,?) என்னதான் ஏரியாவில் கவுன்சிலர் இருந்தாலும் 5 வருஷத்துக்கு ஒரு முறை தானே நம் கதவை தட்டுகிறார். இப்போதெல்லாம் உலகம் ரொம்ப மாறிடிச்சி, அரசியல் (இருகிறவன்) உலகம் மற்றும் இல்லாதவன் உலகம். உனக்கு பசியெடுத்தால் யாரும் வந்து கேட்கபோவதில்லை, எப்படி பசிஎடுக்கும் போது நீயே போய் சாப்பிடுகிறாயோ அதுபோல உன் நாட்டுக்கு எது தேவையோ அதை நீ தான் கேட்க வேண்டும். நம் நாட்டில் இன்னமும் சில COWBOY-கள் (கொள்ளைகாரர்கள்) வலம் வந்துகொண்டிருகின்றனர், பாவம் குதிரை தான் இல்லை.  

அரசு தற்போது கொடுக்கும் இலவச பொருட்களை எடுத்துவிட்டு
இளைங்கர்களுக்கு வேலை தரலாம். நல்லா தரமான பள்ளிகள் அமைத்து தரலாம். அதை விட்டுவிட்டு இந்த ஆட்சியில் என்னை தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு கலர் டிவி, மிக்சி, கிரைண்டர், தங்கம் தருகிறோம் என்று சொன்னால் அது ஏழைகளுக்கு போவதை விட வசதி உள்ளவனுக்கு தான் முதலில் போய் சேருகிறது. இது தான் இப்போதைய நிலைமை......

 நல்லா குளிச்சிட்டு ஒரு 5 Minutes வெளியே போகமுடியல,
எங்க பாத்தாலும் Air Pollution வண்டியில் இருந்து வரும் கருப்பு புகை குறிப்பு முக்கியமாக அரசு வண்டியில்), சாலைகளில் மணல் புழுதி அதிகம் காரணம் சாலைகளில் இருக்கும் மணல்கள், நடந்து போகவேண்டுமென்றாலும் ஒரு கண்ணாடி அணியாமல் போகமுடியவில்லை. பராமரிப்பு இல்லாத சாலைகள்,
சாலையோரங்களில் தேங்கி நிற்கும் சாக்கடை, இது தெரிந்தும் கண்டுகொள்ளாத அரசு.
சுதந்திரம் வாங்கி பல வருடம் ஆகிவிட்ட நிலையில் ஆட்சி காலம் மட்டுமே மாறியது ஆனால் இன்னும் தமிழ்நாட்டு மக்களின் நிலைமை முழுமை பெறமுடியாமல் தொங்கிக்கொண்டு இருகின்றது. தமிழ்நாட்டில் சரியான பேருந்து வசதி இல்லை.


அரசு பேருந்தில் முன்புற கண்ணாடியில் வீடியோ couch என்று இருக்கும், போலிகளை கண்டு ஏமாறாதீர்கள். உள்ளே போய் பார்த்தல் டிவி பெட்டி மட்டும் தான் இருக்கும். பஸ்சில் வைக்க பட்ட டிவி எங்கே போனது என்று தெரியாமல் அரசு தவிக்கின்றது (நல்லா காதுல பூ சுத்துறாங்க :( )......
அரசியலில் இருக்கும் (சில) படிப்பறிவு இல்லாத ஆமைகளை தூக்கிவிட்டு படித்த இளைஞர்(குதிரை) -களை அரசியலுக்கு வரவைப்போம்.




0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog