Pages

Subscribe:

Monday, August 5, 2013

மங்காத்தாவே இனி பாரதமாதா.!

மங்காத்தாவே இனி பாரதமாதா.!

     ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூண்டு வீரர்கள் பல இலட்ச ரூபாய்களை சூதாட்டக்காரர்களிடம் வாங்கிக் கொண்டு 'ஸ்பாட் பிச்சிங்' மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டிருகிறார்கள்.

சென்ற வருடம் பணம் வாங்கிக் கொண்டு சில வீரர்கள் ஆட்டத்தை விட்டுக் கொடுத்ததை 'இந்தியா டிவி' அம்பலப்படுத்தியிருந்தது. அவர்களெல்லாம் புது முகங்கள், மூத்த வீரர்கள் இல்லை என்ற முறையை ஸ்ரீசாந்த் போக்கி விட்டார்.

ஐபிஎல்லின் ஒரு சீசனது மதிப்பு 20,000 கோடி இருக்குமென்றால் அதன் மொத்த மதிப்பு 50,000 கோடியைத் தாண்டுகிறது. 9 அணிகளின் உரிமையாளர்களும் நாடறிந்த தரகு முதலாளிகள்.

குற்றங்களையே பாதையாக்கி ரிலையன்ஸின் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் ஊழியர்களின் ஊதியத்தையும் பொதுத்துறை வங்கிகளையும் கொள்ளையிட்ட மல்லையாவின் ராயல் சேலஞ்சர்ஸ், சிமென்ட் மூட்டையில் பகற்கொள்ளையனும், ஆந்திரத்து ஓய்.எஸ்.ஆர்.ரெட்டியுடன் சேர்ந்து கொள்ளையடித்த வழக்கில் விசாரிக்கப்படுபவருமான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ், மக்கள் பணம் 25,000 கோடியை ஏப்பம் விட்டிருக்கும் சாஹரா நிறுவனத்தால் வாங்கபட்டிருக்கும் புனா அணி.. என ஒவ்வொரு அணி முதலாளியும் கிருமினல் தான்.

தற்போதைய சூதாட்டத்தின் பின்னே தாவூத் இம்ப்ரகிம் இருப்பதாகவும், அது தேசத்துக்கு ஆபத்து என்றும் இந்த விவகாரத்துக்கு முலாம் பூசப்படுகிறது.  விளையாட்டு என்ற சொல்லின் பொருளையே ரத்து செய்து அதனுடன் சேர்ந்திருந்த தேசியம் தொடர்பான ஜிகினா வேலைகளையும் உதிர்த்துவிட்டு, வீரர்களை கூளிப்படையாகவும் முதலாளிகளை அணியின் தலைவர்களாகவும் மாற்றிவிட்ட இந்த ஐ.பி.எல் இல் விளையாட்டுணர்வு என்பதற்கு கடுகளவும் இடம் கிடையாது. தொலைக்காட்சி உரிமை, விளம்பரங்கள், நிறுவனங்களின் தூதர்கள், ஆபாச நடனக்கள் என்று ஐபிஎல் முழுவதும் பணம்தான் ஆட்சி செய்கின்றது. ஒரு சூதாட்டதுக்குரிய விறுவிறுப்பை வழங்கும் வகையில்தான் டி20 போட்டியின் விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

வீரர்களை விலைக்கு வாங்குவது, ஏலம் விடுவது உள்ளிட்ட ஐ.பி.எல்லின் அமைப்பு முழுவதும் மர்மங்களால் ஆனது. நாட்டுப்பற்று விளையாட்டுணர்வு ஏதும் இல்லாமல் அதிக விலைக்கு கொடுக்கும் முதலாளிக்கு தன்னை விற்றுக் கொள்ளும் ஒரு ஆட்டக்காரன், ஒரு சூதாடிக்கு தன்னை விற்றுக் கொண்டதில் என்ன ஒழுக்க கேடு வந்துவிட்டது? ஊழல், ஒழுக்ககேடு, கொள்ளை, சூது போன்ற தேசிய விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் சுலபமாக வெளியில் வந்துவிடுகிறார்கள். இதை பணம் கட்டி வேடிக்கை பார்த்து, கைதட்டுவதற்கு கோடிகணக்கில் மக்கள் இருப்பதால் இனி மங்கத்தாவே பாரதமாதா என்று அவர்கள் அறிவிக்கவும் முடியும்.

Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog