Pages

Subscribe:

Thursday, September 13, 2012

ஒரு கேள்விக்கு பத்து விடைகள்..

புகழ் பெற்ற அறிஞரான ஹஸ்ரத் அலி அவர்களைக் காண ஒரு நாள் பத்து அறிஞர்கள் வந்தார்கள்.

அவர்களில் ஒருவர் ஹஸ்ரத் அலியிடம் "நாங்கள் உங்களிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்க வந்தோம், எங்கள் பத்து பேருக்கும் தனித் தனியே உங்களால் பதில் தர முடியுமா?" என்று கேட்டார்.

அதற்கு ஹஸ்ரத் அலி தாராளமாய் கேளுங்கள் என்றார்.

செல்வம், அறிவு இரண்டில் எது சிறந்தது? ஏன்? இதுதான் கேள்வி என்றார் அறிஞர்களில் ஒருவர்.

ஹஸ்ரத் அலி பத்து பேருக்கும் பதில் சொன்னார், அவை..

1. அறிவானது ஞானிகள், மகான்கள், தீர்க்கதரிசிகள் இவர்களது பரம்பரைச் சொத்து, ஆனால் செல்வமோ கொடுங்கோலரின் ஆயுதம். ஆகவே அறிவே சிறந்தது.

2. உங்களிடம் செல்வம் இருந்தால் நீங்கள் அதைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் அறிவோ உங்களை எப்போதும் காப்பாற்றும். ஆகவே அறிவுதான் சிறந்தது.

3. செல்வனுக்கு எப்போதும் விரோதிகள் அதிகம். ஆனால் அறிஞனுக்கோ நண்பர்கள் அதிகம். ஆகவே அறிவுதான் சிறந்தது.

4. செல்வம் பிறருக்கு கொடுக்க, கொடுக்க குறையும், ஆனால் கல்வியோ அதிகரித்துக் கொண்டுதான் வரும். ஆகவே அறிவே சிறந்தது.

5. அறிவுள்ளவன் எப்போதும் தன் அறிவை பிறருக்கு வாரி வழங்கிக் கொண்டிருப்பான். அவனிடம் தாராளத் தன்மை இருக்கும். ஆனால் செல்வனிடம் கஞ்சத் தனந்தான் இருக்கும். எனவே அறிவுதான் சிறந்தது.

6. செல்வங்களை திருடர்கள் திருடிக் கொண்டு போக முடியும், ஆனால் அறிவை யாராலும் கொல்லோ அடிக்க முடியாது. ஆகவே அறிவே சிறந்தது.

7. செல்வம் கால ஓட்டத்தில் அழிந்துவிடும் ஆனால் அறிவை கால ஓட்டம ஒன்றும் செய்ய முடியாது. எனவே அறிவுதான் சிறந்தது.

8. செல்வத்திற்கு எப்போதும் எல்லையுண்டு , அளவுண்டு, கணக்கு உண்டு. ஆனால் அறிவுக்கோ எல்லையோ, கணக்கோ இல்லை. எனவே அறிவே சிறந்தது.

9. செல்வம் உள்ளத்தில் ஒளியைப் போக்கி அதை இருளடைய செய்கிறது. விரிந்த மனப்பான்மையை குறுகலாக்குகிறது. ஆனால் அறிவோ இருண்ட உள்ளத்தில் ஒளிப் பாய்ச்சி அதை விசாலப் படுத்துகிறது. ஆகவே அறிவே சிறந்தது.

10. செல்வம் உள்ளச் செருக்கையும் ஆணவத்தையும் ஏற்படுத்துகிறது. அதனால்தானே கடவுள் என்று உரிமை கொண்டாடும் நிலைக்கு மனிதனைக் கீழாக்கி விடுகிறது. ஆனால் அறிவோ, இறைவனே! நாங்கள் உனது அடிமைகள் என்ற பண்பையும், பண்பாட்டையும் வளர்த்து நல்வாழ்வு தருகிறது. என்றார்.



Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog