Pages

Subscribe:

Thursday, September 8, 2011

World Film: Don't Look Down (2008) - (கண்டிப்பாக 21+)


எலாய் - 19 வயது இளைஞன். சிமேட்ரியில் வைக்கப்படும் சிலைகள் வடிப்பவன். நீண்ட பொய்க்கால்களைக் கட்டிக் கொண்டு நடக்கக் கூடியவன். அவ்வப்போது ஒரு bun போல மாறுவேடமணிந்து விளம்பரப் பிரசுரங்களை விநியோகிப்பவன். அவனது அப்பா இறந்தபின், அடிக்கடி அவர் தன்னோடு வந்து பேசுவதாக தன அண்ணனிடம் சொல்கிறான்.

மயானத்திற்கு வெளியே இறந்தவர்கள் எல்லோரும் வரிசையில் அமர்ந்திருப்பது போன்ற மாயத்தோற்றத்தையும் அவன் அடிக்கடி காண்கிறான்.


எலாய் வழமையாக காலையில் எழுந்து பார்க்கும்போது அவனது நோட்புக்கில் ஏதாவது எழுதி இருப்பதைப் பார்த்து அச்சரியப்படுகிறான். அது அவனே எழுதியது - தந்தை இறந்ததிலிருந்து அவனுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கிறது.


எல்விரா - பர்சிலோனாவில் இருந்து வக்கேஷனுக்கு தன் பாட்டி வீட்டுக்கு வந்திருக்கிறாள். திறந்து மூடக்கூடிய அவளது அறையின் கூரையினைத் திறந்து நட்சத்திரங்களைப் பார்த்தவாறே தூங்கும் வழக்கமுடையவள்.


ஒருநாளிரவு வழக்கம்போல எலாய் வீட்டின் மேல்தளத்திலிருக்கும் தனது அறையிலிருந்து வெளியேறி பக்கத்து வீடுகளின் கூரைகளின்மீது தனது பயணத்தைத்(?!) தொடரும்போது திறந்திருக்கும் கூரை வழியே கட்டிலில் படுத்திருக்கும் எல்வீராவின்மீது விழுகிறான்


எல்விரா அலறியடித்து எழுந்திருக்க பாட்டி ஓடிவருகிறாள். அலங்க மலங்க விளிக்கும் எலாயிடம் பாட்டி அன்பாகப் பேசுகிறாள். எவ்வளவு  நாட்களாக இப்படித் தூக்கத்தில் நடக்கும் பிரச்சினை இருக்கிறது எனக் கேட்கிறாள். பாட்டி பாரம்பரிய தாந்ரீகங்களில் தேர்ச்சி மிக்கவள்.


அன்றிலிருந்து எலாயும், எல்விராவும் சிநேகிதர்களாக, அவளுக்கும் பொய்க்கால் கட்டி நடக்கும் வித்தையைச் சொல்லித்தருகிறான். தடுமாறி விழப்பார்க்கும் எல்விராவை தாங்கிப்பிடிக்கும் எலாய் அவளை முத்தமிட, அவர்களுக்குள் நெருக்கம் அதிகரிக்கிறது. இந்நிலையில், ஒருநாள் பாட்டி வீட்டில் இல்லை எனக்கூறி எலாயை எல்விரா வீட்டுக்கு அழைக்க, அது அவர்களுக்குள் உடலுறவில் முடிகிறது.......இல்லை தொடங்குகிறது!


அதன்பின் தொடரும் காட்சிகள் எல்லாம் முழுக்க முழுக்க வயது வந்தோருக்கானது!
உறவு கொள்ளும் முன் எலாய், எல்விரா இருவருக்கிடையே நிகழும் உரையாடல்கள் அருமை!


எல்விரா : நான் இறந்தபிறகு கடவுளைக்காண விரும்பவில்லை.இப்போதே நம் உறவின்மூலம் காண விரும்புகிறேன் - என எல்விரா கூறுகிறாள்.
எனக்கு ஓஷோவின் ஞாபகத்தை ஏற்படுத்தியது!எல்விரா : நாமிருவரும் உறவுகொள்ளும்போது ஒரு  எலக்ட்ரிசிட்டி  உருவாகிறது, பயோ எலக்ட்ரிசிட்டி!
எலாய் : ஓ! அப்போ நாம் இப்போ எலக்ட்ரிசிட்டியை உருவாக்கத்தான் வந்திருக்கிறோமா?

எல்விரா : இரண்டு விஷயம் நீ தெரிந்துகொள்ள வேண்டும். ஒன்று உன்னுடைய கிளைமாக்ஸ் கண்ட்ரோல். இரண்டு, உன் லவ்வரின் சடிஸ்பாக்சன். இதுல நீ ஒழுங்கா இருந்தா உலகத்திலேயே நீதான் பெஸ்ட் லவ்வர்!


எல்விரா : இதையெல்லாம் ஒழுங்காகக் கற்றுக்கொள். ஒரு முறை உன்னிடம் வந்த பெண் கனவிலும் வேறு யாரையும் நினைக்கக் கூடாது!


சொல்லித் தெரிவதில்லைமன்மதக்கலை என்கிறார்கள். எல்விரா சொல்லிக் கொடுப்பதைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லையே! எல்லாமே சொல்லிக்கொடுக்கப்பட வேண்டுமோ - எனத் தோன்றுகிறது!


எலாய்க்கு உச்சகட்டத்தின்போது, அவன் வாழ்நாளில் பார்த்திராத நாடுகளின் நகரங்கள் எல்லாம் , மனத்திரையில் காட்சிகளாக விரிகின்றன. ஸ்பெயின், ஜெர்மன், ரோம், லண்டன், கொல்கத்தா கூட வருது!


எப்படி இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும்னு ஆச்சரியமா இருந்தது படம் பார்க்கும்போதும், இப்போதும்!


கொஞ்சம்கூட முகஞ்சுளிக்க வைக்காமல், அருவருப்பு ஏற்படாமல், மிக முக்கியமாக பார்வையாளனுக்கு எந்தவித கிளர்ச்சியும் ஏற்படுத்தாமல் ஒரு பாலியல் கல்வியைப் போதிப்பது போலவே படமாக்கப்பட்டிருக்கும்!
மிக அருமையான ஒளிப்பதிவு! மொழி புரியாத பாடல்கள், வித்தியாசமான இசையில் ரசிக்கவைக்கின்றன!


எல்விரா வக்கேசன் முடிந்து பிரிந்து செல்லும்போது பிரிவுத்துயரில் தனது கண்ணீரை மறைக்க, எலாய் தனது விளம்பர பொம்மை Bun உடையை அணித்து எல்விராவின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்து செல்லும் காட்சியும் பின்னணி இசையும் மிக அருமை!
இயக்குனர் - Eliseo Subiela
மொழி -  Spanish
நாடு : ArgentinaImage by FlamingText.com


0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog