
அதிக அளவில் மதுபானங்கள் குடிப்பவர்களின் எடை அதிகரிக்கும். ஏனெனில் அவற்றில் சர்க்கரை சத்து அதிக அளவில் இருப்பதால் அது போன்ற நிலை ஏற்படும். இது ஏற்கனவே நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருந்தது. தற்போது புதிதாக ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள நவாரோ பல்கலைக்கழக நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில் அதிக அளவு ஆல்கஹால் கலந்துள்ள மது குடிப்பவர்களின் எடை அதிகரிக்கும். அதே நேரத்தில் ஓரளவு சுமாராக மது குடிப்பவர்களின் உடல் குறையும் வாய்ப்பு இருப்பது தெரியவந்தது.
அதை தொடர்ந்து மிக குறைந்த அளவு ஆல்கஹால் கலக்கப்படும் ஒயினை தினசரி குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்காது. மாறாக கணிசமாக குறையும். இந்த தகவலை ஆய்வு குழுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments