Pages

Subscribe:

Wednesday, September 5, 2012

தக்காளி சிக்கன் கிரேவி


தேவையான பொருட்கள்:

சிக்கன் 1/2 கிலோ
பெரிய வெங்காயம் 1/4  கிலோ
பழுத்த தக்காளி 1/4 கிலோ
மிளகாய்த் தூள் 1/2 டீ ஸ்பூன்
மிளகு 1/2 டீ ஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
பூண்டு 10 பல்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு

அரைக்க:
சீரகம், மிளகு, மிளகாய்த்தூள், பூண்டு, தக்காளி, 
ஆகியவற்றை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைக்கவும். நறுக்கிய பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும். சிக்கனை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும். சிறிதளவு உப்பு போட்டு நன்றாக கிளறவும். இதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை போட்டு நன்றாக வதக்கவேண்டும். அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சிக்கனை சிம்மில் வேக வைக்கவும்.
சிக்கன் வெந்து எண்ணெய் மேலே மிதந்து வரும் போது ஸ்டவ்வை நிறுத்தி விடவும்.மல்லித்தழை தூவி அலங்கரித்து பரிமாறலாம். இது சாதத்தில் போட்டு சாப்பிடலாம், சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சூப்பர் தக்காளி சிக்கன் கிரேவி.

Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog