Pages

Subscribe:

Wednesday, February 16, 2011

நகைச்சுவை

ஏண்டா மெதுவா லெட்டர் எழுதுற?
எங்க அப்பாவுக்கு வேகமாக படிக்க வராது, அதான்

உங்க வீட்டுல மொத்தமா எத்தனை பேரு?
எங்க வீட்டுல மொத்தமா யாருமே இல்லைங்க எல்லோரும் ஒல்லி தான்.

நகை கடைக்காரனுக்கு பிடித்த சோப்?
பொன் வண்டு.

பழம் நழுவி பாலில் விழுந்து டம்பளர் உடைந்து போச்சு. ஏன்?
விழுந்தது பலாப்பழம் ஆச்சே

ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கப் போறேன்.. ஆசீர்வாதம் பண்ணு பாட்டி.
பார்த்து மெதுவா ஓடிப்போ, வேகமாக ஓடி கைய, கால ஓடிச்சுக்கிடாதே

டேய் நாளைக்கு பெண் பார்க்க போறேன். கண்டிப்பா நீ வரனும்?
ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா

நீங்கள் எப்போதும் என்னசோப் உபேயகிக்கிறீங்க?
நான் எப்போதும் சோப் உபேயாகிப்பதில்லை குளிக்கும் போது மட்டும் தான்.

அந்த ஆள் புத்தகத்்தை தின்கிறார் ஏன்?
அவருக்கு அறிவு பசி அதிகமாயிடுச்சு

கி.பி. 5000ல் உலகம் எப்படியிருக்கும்?
உருண்டையாகத்தான்...

 மாமியார் - மருமகள்
உன் மாமியார் காணாம போனதுக்கு சந்தோஷப்படாம கண்டுபிடித்து கொடுப்போருக்கு ரூ. 1000 பரிசுன்னு அறிவிச்சுருக்கியே ஏன்?
என்கிட்ட இருந்து தப்பிச்சு போய் அவங்க சந்தோஷமா இருந்தா விட்டுடுவேனா!

 என் மருமகள் அக்கிரமம் தாங்க முடியலை
என்ன பண்றா?
என்னைப் பார் சிரின்னு வாசல் கதவுல எழுதி அதுக்கும் மேலே நான் சிரிக்கிற மாதிரி இருக்கிற போட்டோவை மாட்டி வச்சிருக்கா.

என் மாமியாரை நான் மதிப்பேத இல்லை? எப்படி?
அட நான் என் மாமியாரையே மதிப்பது இல்லை உன் மாமியாரையா மதிப்பேன்.

ஊர்ல இருந்து வந்த உன் மாமியார் ஏன் கோபமா இருக்காங்க?
திருஷ்டி படம் காணாம போயிருச்சுன்னு என் மாமியார் படத்தை மாட்டி வைச்சிருந்தேன்...!

இன்னிக்கு என்ன உன் மாமியார் சந்தோஷமா இருக்காங்க?
இன்னிக்கு நாங்கள் போடற சண்டை இண்டர் நெட்டிலே தெரியப்போகுதாம்.









0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog