Pages

Subscribe:

Thursday, February 17, 2011

Personal Place - கிறுக்கல்


  ------------------------ அம்மா -----------------------------

பத்து மாதம்
சுமந்தாய் - வலி இல்லை உனக்கு.!

தொப்புள் கோடி
பிரியும் போது மட்டும் - வலி
தாங்காமல் அழுதாய் - என் தாய்.!
என்னை அவ்வளவு பிடிக்குமா?

பல இரவுகளை
எனக்கு
பகலாக்கி கொண்டேன் - உன்
தூக்கத்தை கெடுத்து.

திரும்பி படுத்தால் நான்
இறந்து விடுவேன் என்று
தூங்காமல் இருந்தாய்.

உன் தூக்கத்தை
எனக்காக கொடுத்தாய்..

பத்து மாதம்
சுமையாக மட்டுமே இருந்தேன் - இருந்தாலும்
சுகமாய் பெற்றெடுத்தாய்.

உன் காதலால்
விதையாகி - உன்
அன்பால் துளிர்விட்டு - உன்
ரத்தத்தை உணவாக்கி - உன்
மூச்சு காற்றில் உயிர் கொண்டு
வளர்ந்தேன்....!

நீ இல்லாமல் போனால்
மண்ணோடு நான் போவேன்..

என்றாவது ஒருநாள்.!
நீ தாங்கிய வலியை
நேரில் பார்க்க நேரிடும். அன்று
எனக்கு தைரியம் வேண்டும்.


                இரா. தேசிங் 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

சந்தித்த முதல் நாள் முதல்
 
நீ யாரோ! 
நான் யாரோ!
  சந்திக்கும் முதல் நாள் வரை.

சொட்டும் மழை போல் 
இமை மேல் விழுந்தாய்.

கண் மூடி திறக்கும் முன் 
எங்கே மறைந்தாள்?

என் 
இதயத்தில் எப்படி புகுந்தாள்?

அனுமதியும் 
கேட்கவில்லை - நான் 
வழிகளும் தரவில்லை.

நடைப்பாதையில் 
நடக்கிறேன் 
நிழலாய் தொடர்கிறாள்.
  சந்தித்த முதல் நாள் முதல்

அன்பின் 
மழையில் நினைய வைத்தாள்.
  சந்தித்த முதல் நாள் முதல்

தூங்காத கண்கள் - அது
சொல்லபடாத வார்த்தைகள்
விடிந்தும் 
நீள்கின்ற கனவுகள்.
யாருமின்றி 
தேடும் தனிமை
தெரிந்தும் எப்படி சொல்வேன்.!
  சந்தித்த முதல் நாள் முதல்
                                                           
                 இரா .தேசிங் 

 ------------------------------------------------------------------------------------------------------------

அனுமதி கேட்காமல்
இன்னொருவரின்
அறைக்குள் நுழைபவர்
முட்டாளாம்...

உன்னை
முட்டாள் என்று 
அழைக்கலாமா?


என்னிடம்
அனுமதி கேட்காமல்
என் இதயமெனும்
அறைக்குள்- நீ
நுழைந்துவிட்டாயே....!!!!

                 இரா .தேசிங்

------------------------------------------------------------------------------------------------------------

சம்மதம்....!

எங்கிருக்கிறாய் என்
இனியவள்.


ஒரு
போர்வைக்குள் போதும்
என்ற
வார்த்தையை தூக்கிப்போடு..


நம் இதழ்கள்
இரண்டும் பசியாற..


இதழ் மேல்
இதழ் நடக்க..


உன் இமைமீது
முத்தமிட..


காதோரம்
புரிந்துகொள்வாயா - என் உஷ்ணத்தை ?


உன் பெண்மையை(வெட்கம்)
முத்தத்தால்
சிவக்கவைக்கவா?


என் விரல்கள்
தீண்டும்போது
உன் விழிகள் சொன்னது......
என் இதழ்கள்
உரசும்போது
உன் இமைகள்
சொன்னது......


என் இதயம்
கேட்பதற்கும் - உன் விழி
சொல்லுமா?
....
....
சம்மதம்.?

                     இரா . தேசிங்

-------------------------------------------------------------------------------------------------------------

காத்திருக்கிறேன்

வானவில்லாக
ஜாலம் காட்டினாய்..


தொட வந்தேன்
தூர விலகினாய்.


ரோஜா போன்று
புன்னகை புரிந்தாய்.


பறிக்க விரல் நீள்கையில்
முல்லை கிழித்தாய்.


பிரியமாக நெருங்கினால்
பிடிவாதம் பிடிக்கிறாய்.


அன்பாக பேசினால்
அலட்சியம் புரிகிறாய்..


இனி
இரவெல்லாம்
உறங்காமல்
இருந்திடுவேன்...!


நீ வந்து
எழுப்பாவிடில் - இறந்து விடுவேன்.


வருவாயா? உனக்காக ........ காத்திருக்கிறேன்..


                   இரா . தேசிங்
------------------------------------------------------------------------------------------------------------------------------------ 

பெண்ணே
உன்னைப்பார்த்து
தடுமாறிப்போனேன்.. ஏனோ!


உன் விழி போடும்
வார்த்தைக்கு
விடை புரியாமல்.


பெண்ணே இந்த மண்ணை
இரசிக்கப்படுகிறேன்
வெட்கத்தால் - உன் 
விரல்
கோலம் போடுகையில்.


 பாவி நீ
இல்லையென்றால் - படுக்கையும்
மரணமாகும்.


 உன்
பணிமொழியை கேட்காவிட்டால்
பாவி உடல்
பிணமாய் போகும்.


 ஓவியமும் வெட்கப்படும்
உன்
ஓரவிழி பார்வை கண்டால்


மதுரசமும்
மயங்கும்
உன் இதழ் கண்டால்.


வெண்ணிலவும்
முகவரி இழக்கும் - உன்
முகம் கண்டால்.


மலர்ந்ததோ - நீ
வாடியதோ - நான்.

                   இரா . தேசிங்

------------------------------------------------------------------------------------------------------------------------

அ.......ஆ.........

 ன்பின் உருவம் நீ

 ளை மயக்கும் இயல்பான கவிதை - உன்

  ஈ  ட்டி பார்வையில் பிழைத்தவன் ஏது?

  ரத்த குரலில் அழுத உன்னை

 ஞ்சலில் போட்டு தாலாட்டிய நாள் இன்று

   ன்னி என்னி உன் பேச்சில்

   ங்க வைக்கின்றாய்

   ம்பெரும் பூதமும் அடிபடியும்

   ற்றை தேவதை உன்னை பார்த்தல்

   ராயிரம் விண்மீன்கள் வாழ்த்தட்டும்

வை வயது வரை... 


                    இரா. தேசிங். 

------------------------------------------------------------------------------------------------------------------------------------


1............2...........3


 1 உயிரில் வாழ்ந்தோம்


 2 உருவங்களாய் 

 3 வார்த்தைகள் நம் 

 4 கண்களால் பேசினோம்

 5 அருவி போல் எண்ணங்கள் 

 6 போல ஓட 

 7 ஜென்மம் போதாது - உன்னோடு முழுமைப்பெற 

 8 வது அதிசயம் நீ 

 9 நவரத்தினங்களை பின் தள்ளிய 

10 வது ரத்தினம் உன் கண்கள்.


                இரா .தேசிங் 
------------------------------------------------------------------------------------------------------------------------------------ 

 

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog