Pages

Subscribe:

Tuesday, February 15, 2011

General Knowledge

மிகவும் வெப்பமான கிரகம் வீனஸ்.
சீனப்பெருஞ்சுவர் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு கி.பி. 214.
கால்சியம் ஆக்சைடின் வர்த்தக பெயர் சுட்ட சுண்ணாம்பு.
இரும்பு துருபிடிக்கும்போது அதன் எடை கூடுகிறது.
மிகப் பெரிய அணு உலை பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ளது.
உலகில் அதிக அளவில் காபி பயிரிடப்படும் நாடு பிரேசில்.
காயத்ரி மந்திரத்தை இயற்றியவர் விஸ்வாமித்திரர்.
தென்னக இரயில்வேயின் தலைமையிடம் சென்னை.
தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படும் இடம் அகும்பி.
நபார்டு வங்கி 1982 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.


இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி.) துவங்கப்பட்ட ஆண்டு 1956.
ஆகாய விமானத்தின் வேகத்தை அளக்கும் கருவி டேக்கோ மீட்டர்.
ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் விருது மகசேசே விருது.
சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த ஊர் வத்தலகுண்டு.
நமது நாட்டில் பழமையான பொது தபால் நிலையம் சென்னையில் உள்ளது.
நாட்டிய சாஸ்திரம் என்ற நூலை எழுதியவர் பரத முனிவர்.
இண்டெர்நெட் முதலில் அறிமுகமான நாடு அமெரிக்கா.


தனது உடலமைப்பைவிட வால் நீளம் கொண்ட விலங்கு குரங்கு.
புத்த மதத்தில் தியான முறையைப் புகுத்தியவர் தர்ம பாலர்.
ரத்த அழுத்தத்தை கணக்கிடப் பயன்படுத்தும் கருவி ஸ்பிக்மோ மானோமீட்டர்.
வங்காள தேசத்தின் முக்கிய போக்குவரத்து படகு போக்குவரத்து.
பனிக்கட்டியின் உருகுநிலை 0 டிகிரி சென்டிகிரேட்.
காதுகேட்கும் கருவியைக் கண்டுபிடித்தவர் கிரகாம் பெல்.
காஷ்மீர் சிங்கம் என்றழைக்கப்பட்டவர் ஷேக் அப்துல்லா.
முதல் போப் ஆண்டவர் இயேசுவின் சீடரான பீட்டர்.
சாரநாத்திலுள்ள மூன்று சிங்கங்கள் உள்ள கல்தூணை நிறுவியது அசோகர்.


மிகச் சிறிய பூக்கும் தாவரம் உல்ஃபியா.அணுவில் உள்ளவை புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான்.குள்ளநரி, நாய் இனத்தைச் சேர்ந்தது.
டைனமோவைக் கண்டுபிடித்தவர் மைக்கேல் ஃபாரடே.
கொரில்லா போர்முறையை உருவாக்கியவர் கரிபால்டி(இத்தாலி).
முதல் கால்பந்து உலகக்கோப்பைப் போட்டி உருகுவே நாட்டில் நடந்தது.


இந்திய சனாதிபதி மாளிகை எட்வின் லுட்யன்ஸ் என்பவரால் கட்டப்பட்டது.புத்தர் பிறந்த நகரம் லும்பினி.
நின்று கொண்டு அடைகாக்கும் பறவை பெங்குவின்.
பேட்டரியில் பயன்படுத்தப்படும் அமிலம் கந்தக அமிலம்.
மனித உடலில் அதிகம் காணப்படும் தாதுப் பொருள் கால்சியம்.

சலவைக்கல்லுக்கு பெயர் பெற்ற மாநிலம் ராஜஸ்தான்.
தமிழகத்தின் புண்ணியத் தீவு என்று இராமேஸ்வரம் அழைக்கப்படுகிறது.

இங்கிலாந்தில் அடிமை முறையை ஒழித்தவர் வில்லியம் வில்பர் போர்ஸ்.
தட்சின கங்கை என்றழைக்கப்படும் நதி கோதாவரி.
உலோகங்களை பற்றவைக்க அசிட்டிலின் வாயு பயன்படுகிறது.
ஒரு மைல் என்பது 1609 மீட்டர்.
பச்சைத் தங்கம் எனப் போற்றப்படுவது யூகலிப்டஸ் மரம்.
அணுக்களில் லேசானது ஹைட்ரஜன்.
நமது நாட்டுக்குச் சொந்தமான தீவுகள் 1197 தீவுகள்.


உயிரினங்களில் பார்வை சக்தி அதிகம் கொண்டவை பறவைகள்.
நமது உடலின் மிகப்பெரிய சுரப்பி கல்லீரல்.

வளிமண்டலத்தில் அதிகம் காணப்படும் வாயு நைட்ரஜன்.
இங்க் தயாரிக்கப் பயன்படும் உப்பு பெரஸ்சல்பேட்.
எலுமிச்சம் பழத்தில் உள்ள அமிலம் சிட்ரிக் அமிலம்.
காற்றின் வேகம் மற்றும் அழுத்தத்தை அளக்க அனிமா மீட்டர் பயன்படுகிறது.


வெடி மருந்தைக் கண்டுபிடித்தவர்-ஆல்பிரட் நோபல்.

முதன் முதலில் கட்டப்பட்டதும் , மிகப் பழமையனதுமான கலங்கரை விளக்கம் எகிப்தில் உள்ளது.
ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை உருவாக்கியவர்- இயான் ஃப்ளௌமிங்.
இங்கிலாந்தின் சரித்திரத்தை இயற்றியவர் மெக்காலே.
எகிப்து நாட்டின் கடைசி மன்னன்-பரூக்.
முதன் முதலில் உலகப்படம் வரைந்தவர் -தாலமி.
செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகர் - சிவாஜி கணேசன்.
உலகின் மிகச் சிறிய ரயில் நிலையம் உள்ள இடம் வாடிகன்.
ஏழு குன்றுகளின் நகரம் என அழைக்கப்படுவது வாடிகன்.
ஐ. நா. சபையின் தந்தை என்று கூறப்படுபவர் கோர்டல் ஹால்.
தங்க நகைகளின் தரத்திற்கு வழங்கப்படும் சான்றிதழின் பெயர் ஹால்மார்க்.
உலக கொடிகளில் அதிகம் இடம் பெற்றுள்ள நிறம் சிவப்பு.

ஞானபீட விருதை உருவாக்கியவர் - ரமாதேவி ஜெயின்.

இந்திய மாதர் சங்கம் எந்த நகரில் தோற்றுவிக்கப்பட்டது - சென்னை.
புதுச்சேரி உருவானது - 1674ம் ஆண்டு.
குவாண்டம் தியரியை உருவாக்கிய விஞ்ஞானி - மாக்ஸ் பிளாங்க்.
ஒலி அலைகளை மின் அலைகளாக மாற்றும் கருவி - மைக்ரோஃபோன்.
நவீன சுற்றுலாவின் தந்தை என்றழைக்கப்படுபவர் - தாமஸ் குக்.
பாராசூட் தயாரிக்க பயன்படும் இழை - நைலான்.
மின்சாரத்தை அளக்கும் கருவி - அம்மீட்டர்.
நமது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி - பாரத ஸ்டேட் வங்கி.
அரியானா மாநிலமானது - 1966ம் ஆண்டு.
இரத்தம் உறைவதற்கு உதவும் வைட்டமின் - வைட்டமின் கே.
டிரான்ஸ்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - 1948ம் ஆண்டு.
இஸ்ரேல் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு - 1948ம் ஆண்டு

தீபாவளி பண்டிகை கொண்டாடாத ஒரே மாநிலம் கேரளா.

நமது நாட்டின் மிகப்பெரிய யூனியன் பிரதேசம் அந்தமான்-நிக்கோபார்.
மிக அதிகமான பரப்பளவை கொண்ட தமிழக மாவட்டம் ஈரோடு.
எரிமலையே இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா.
அருங்காட்சியகங்கள் அதிகம் உள்ள நாடு ஜெர்மனி.
திராட்சைத் தோட்டம் அதிகம் உள்ள நாடு மால்டோவா.
அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு ஆஸ்திரேலியா


உலகின் முக்கிய தீவுகள், அமைந்துள்ள இடம் மற்றும் பரப்பளவு.

1.கிரீன்லாந்து - வட அட்லாண்டிக் கடல் - 8.40,000 சதுர மைல்கள்.
2. பாபுவா நியூகினியா - கிழக்கு இந்தியப்பெருங்கடல் - 3,06,000 சதுர மைல்கள்.
3. போர்னியோ - கிழக்கு இந்தியப்பெருங்கடல் - 2,80,100 சதுர மைல்கள்.
4. மடகாஸ்கர் - கிழக்கு இந்தியப்பெருங்கடல் - 2,26,658 சதுர மைல்கள்.
5. டாஃபின் - ஆர்க்டிக் கடல் - 1,95,928 சதுர மைல்கள்.
6. சுமத்திரா - இந்தியப் பெருங்கடல் - 1,65,000 சதுர மைல்கள்.
7. ஹான்ஷு - பசிஃபிக் பெருங்கடல் - 87,805 சதுர மைல்கள்.
8. பிரிட்டன் - வடகடல் - 84,200 சதுர மைல்கள்.
9. விக்டோரியா - ஆர்ட்டிக் கடல் - 83,897 சதுர மைல்கள்.
10. எலியஸ்மேர் - ஆர்ட்டிக் கடல் - 75,767 சதுர மைல்கள்.
11. செவிபஸ் - இந்தியப் பெருங்கடல் - 69,000 சதுர மைல்கள்.
12. ஜாவா - இந்தியயப் பெருங்கடல் - 48,900 சதுர மைல்கள்.
13. கியூபா - கரீபியன் கடல் - 44,218 சதுர மைல்கள்.
14. வடக்கு - நியூசிலாந்து பசிஃபிக் பெருங்கடல் - 44,035 சதுர மைல்கள்.
15. நியூ ஃபவுண்லாந்து - வடஅட்லாண்டிக் கடல் - 42,031 சதுர மைல்கள்.


உலகின் பெரிய பாலைவனங்கள், அமைந்துள்ள நாடு மற்றும் பரப்பளவு

.1. சகாரா - வடஆப்பிரிக்கா - 35,00,000 சதுர மைல்கள்.
2. கோபி - மங்கோலிய-சீனா - 5,00,000 சதுர மைல்கள்.
3. படகோனியா - தெற்கு அர்ஜெண்டீனா - 3,00,000 சதுர மைல்கள்.
4. லெஹாரி - தென் ஆப்பிரிக்கா - 2,25,000 சதுர மைல்கள்.
5. கிரேட்சாண்டி - மேற்கு ஆஸ்திரேலியா - 1,50,000 சதுர மைல்கள்.
6. சிஹுவாஹுவான் - மெக்சிகோ - 1,40,000 சதுர மைல்கள்.
7. தக்லிமாகன் - சீனா - 1,40,000 சதுர மைல்கள்.
8. கராகும் - துருக்மேனிஸ்தான் - 1,20,000 சதுர மைல்கள்.
9. தார் - இந்தியா - 1,00,000 சதுர மைல்கள்.
10. கிஸில்கும் - கஜகஸ்தான்-உஸ்பெகிஸ்தான் - 1,00,000 சதுர மைல்கள்.


உலகின் நீளமான நதிகள், அமைந்துள்ள நாடு மற்றும் நீளம்.


1. நைல் - வட ஆப்பிரிக்கா - 4160 மைல்கள்.
2. அமேசன் - தென் அமெரிக்கா - 4000 மைல்கள்.
3. சாங்சியாங் - சீனா - 3964 மைல்கள்.
4. ஹுவாங்கோ - சீனா - 3395 மைல்கள்.
5. ஒப் - ரஷ்யா - 3362 மைல்கள்.
6. ஆமூர் - ரஷ்யா - 2744 மைல்கள்.
7. லீனா - ரஷ்யா - 2374 மைல்கள்.
8. காங்கோ - மத்திய ஆப்பிரிக்கா - 2718 மைல்கள்.
9. மீகாங் - இந்தோ-சீனா - 2600 மைல்கள்.
10. நைஜர் - ஆப்பிரிக்கா - 2590 மைல்கள்.
11. எனிசேய் - ரஷ்யா - 2543 மைல்கள்.
12. பரானா - தென் அமெரிக்கா - 2485 மைல்கள்.
13. மிஸ்ஸிஸிபி - வட அமெரிக்கா - 2340 மைல்கள்.
14. மிசெளரி - ரஷ்யா - 2315 மைல்கள்.
15. முர்ரெடார்லிங் - ஆஸ்திரேலியா - 2310 மைல்கள்.

உலகில் உள்ள கடல்கள் மற்றும் அவற்றின் பரப்பளவு.

1. தென் சீனக் கடல் - 29,64,615 சதுர கிலோமீட்டர்.
2. கரீபியன் கடல - 25,15,926 சதுர கிலோமீட்டர்.
3. மத்திய தரைக் கடல - 25,09,969 சதுர கிலோமீட்டர்.
4. பேரிங் கடல் - 22,61,070 சதுர கிலோமீட்டர்.
5. மெக்சிகோ வளைகுடா - 15,07,639 சதுர கிலோமீட்டர்.
6. ஜப்பான் வளைகுடா - 10,12,949 சதுர கிலோமீட்டர்.
7. ஒக்கோட்ஸ்க் கடல் - 13,92,125 சதுர கிலோமீட்டர்.
8. ஹட்சன் வளைகுடா - 7,30,121 சதுர கிலோமீட்டர்.
9. அந்தமான் கடல் - 5,64,879 சதுர கிலோமீட்டர்.
10. கருங்கடல் - 5,07,899 சதுர கிலோமீட்டர்.
11. செங்கடல் - 4,52,991 சதுர கிலோமீட்டர்.
12. வடகடல் - 4,27,091 சதுர கிலோமீட்டர்.
13. பால்டிக் கடல் - 3,82,025 சதுர கிலோமீட்டர்.
14. கிழக்கு சீனக்கடல் - 12,52,180 சதுர கிலோமீட்டர்.
15. கலிஃபோர்னியா வளைகுடா - 1,61,897 சதுர கிலோமீட்டர்.
16. அரபிக் கடல் - 2,25,480 சதுர கிலோமீட்டர்.
17. ஐரிஸ் கடல் - 8,650 சதுர கிலோமீட்டர்.

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog