Pages

Subscribe:

Saturday, July 7, 2012

ஒளிரும் இந்தியா


இந்திய அரசியலைப்பு சட்டம் இன்னும் அழுத்தமாக எழுதிருக்கலாம் நம் அம்பேத்கார். தவறு செய்பவன் யாராக இருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும் உடனடியாக அவர் மேல் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.. பல பேர் அரசாங்க பதவியிலும், சிலர் உயர் பதவியிலும், இன்னும் சிலர் கட்சியிலும் இருப்பதால் அவர்கள் செய்யும் தவறுகளை யாரும் தட்டி கேட்பதில்லை.. எங்கு பார்த்தாலும் லஞ்சம், ஏமாற்றி பிழைத்தல், கௌரவ பிச்சைக்காரர்களும்,கொள்ளைகரர்களும் நிறைந்த நம் தமிழ்(நாடு) வருங்காலத்தை நோக்கி பார்த்தால் எப்படி இருக்கும்? நம் பிள்ளைகள் நிலை என்ன? அவர்களும் கொல்லைகாரர்களாக தான் போகிறார்கள் என்பது நிச்சையம்.  ஊழல் செய்யவதற்காகவே பல கட்சி. ஆனால் கொள்கை என்ற பெயரில் பெரிய கூப்பாடு. அதற்கு பல புரோக்கர்கள் தாங்கிப் பிடிகின்றனர்.

இந்த அரசியல் புழுக்களை காட்டிலும் வெள்ளையன்-கள் எவ்வளவோ மேல்..! சிந்தித்து பார்க்கவும். உண்மையான தலைவர்கள் அண்ணா, காமராஜர், பெரியார் இப்படி நல்ல தெய்வங்கள் பிறந்து வாழ்ந்த தமிழ்நாட்டில் அரசியல் வாசலில் நுழைந்த சில தப்பான சாக்கடை மிருகங்கள் நாட்டை சூரையாடிகொண்டிருகிறது. கேவலம் பணத்தை வாங்கிக்கொண்டு தனிமனித சுயஉரிமையை ஐந்து வருடத்திற்கு அடகு வைக்கிறார்கள். மிஞ்சி போனால் அந்தக் பணத்தில் இரண்டு நாள் சந்தோசமாக கழிக்க முடியும். பிறகு வாழ்கை முழுவதும் அண்ணார்ந்து பார்த்து துப்ப வேண்டியது தான் நிலைமை. 

ஜெயலலிதா செய்த ஒரு  விளையாட்டு விளம்பரம், ஒரு வருட (ரோதனை மன்னிக்கவும்) சாதனை என்று சாலை முழுவதும் எங்கு பார்த்தாலும் விளம்பர பலகையும், சுவரொட்டிகளும் தான் கண் முன் காட்சியளித்தது. அதனையும் பொதுமக்களின் பணம், இப்படி நல்லதுக்காக செலவு செய்யாமல் வீண் விளம்பரத்துக்காக செலவு செய்வது எந்த விதத்தில் நியாயம். இது அத்தனையும் பொதுமக்களுக்கு தெரியும் ஆனால் யார் கேட்க முடிந்தது.

எதிர் கட்சியும் சரி, எவ்வளவோ நாச வேலைகள் செய்தாலும் தமிழ்நாட்டு மக்கள் இன்னும் கண் விழித்தபாடில்லை. 2ஜி-ல் அடித்த பணம் என்ன ஆனது என்று வெளியில் தெரியாமல் இன்னும் மறைக்க வைக்கபட்டிருகிறது. சின்ன திருட்டு செய்றவனை பிடித்து அடி உதை கொடுக்கும் பொதுமக்களும் சரி போலிஸ்-ம் சரி, அவனுக்கு கொடுக்கும் தண்டனையை போல கோடிகணக்கில் பொதுமக்களின் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் அரசியல் நரிகளை மட்டும் ஏன் இப்படி செய்வதில்லை?

கருணாநிதி கூறியது: 
"எங்களை தோற்கடியுங்கள். நாங்கள் உங்களை மறக்க மாட்டோம்" என்கிறார் கருணாநிதி.
ஊழல் ஊழல் என்று எதிர்கட்சிகள் கூப்பாடு போடுகின்றன. ஸ்பெக்டரம் விவகாரத்தில் ஊழலே இல்லை-
மத்திய அமைச்சர் ராசா ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் தவறே செய்யவில்லையே-
நாடாளுமன்றம் சுமூகமாக நடக்க வேண்டும் என்பதற்காகவே ராசா ராஜினாமா செய்தார்-
சி.பி.ஐ. ரெய்டு நடந்ததாலே ஒருவர் குற்றவாளி என்று முடிவு செய்யக்கூடாது. ராசா மீது குற்றச்சாட்டு நிருபணம் ஆனால், அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கத் தயங்காது-
ராசா கைது செய்யப்பட்டதால், அவர் குற்றவாளி என்றால் எப்படி? இப்படி பேசும் நாக்கு இன்று என்ன செய்துக் கொண்டிருக்கிறது என்பது தான் பொதுமக்களின் கேள்வி.
ஊழல் செய்துவிட்டார் என்று கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்போது கருணாநிதி என்ன சொல்கிறார்?
குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது தவறு என்றால், சி.பி.ஐ. மீது தி.மு.க சார்பில் மான நஷ்ட வழக்கு தொடுக்கலாமே. அல்லது குற்றப்பத்திரிகையில் அவர் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டின் பேரிலாவது தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதோடு, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி வைக்கிறோம் என்று கருணாநிதி அறிவிப்பாரா?
மேலும், அந்த ஊழல் வழக்கில் ராசாவுக்கு நீதி மன்றத்தில் தண்டனை கிடைத்தால், அவர் மூலமாக வந்த தி.மு.க.வின் நிதியை, மத்திய அரசிடம் ஒப்படைத்து விடுகிறோம் என்று அறிவிக்கத் தயாரா?
இப்படி செய்தால், தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல.... உலகம் முழுவதும் யாரும் உங்களை மறக்கமாட்டார்கள். (Thanks to tamilleader.in)

ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கு இரண்டு கட்சியை விட்டால் வேறு கட்சி அரசியலில் வர தகுதி இல்லையா? அல்லது இப்படியும் சொல்லலாம் தகுதி இல்லாமல் ஆகிவிட்டார்கள் என்று சொல்லுவது பொருந்தும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக சொல்லுவேன் இப்போது இருக்கும் அரசியல்வாதிகளை எதிர்காலத்தில் சொல்லும் அளவிற்கு யாரும் இல்லை. யாரும் இருக்க போவதில்லை. வேஷம்போடும் பல அதிகாரிகளை நம்பி இன்னும் எதனை நாள் தான் நீங்கள் பேசாமல் ஓட்டு போடபோகிறீர்கள். மாறி மாறி எதிர்கட்சியை பற்றி குறை சொல்லிக்கொண்டு இருப்பார்களே தவிர நல்லது செய்ய முன் வருவதில்லை. ஒரு இளைஞன் அரசியலுக்கு வர வேண்டும். ஜாதிகளை ஒழிக்க வேண்டும். சமமான ஒற்றுமை மதிப்பினை உருவாக்கவேண்டும். காந்தி சொன்னது போல் என்று ஒரு பெண் தனியாக நகைகளோடு தெருவில் நடக்க முடியுமோ அன்று தான் உண்மையான சுதந்திரம். எவரும் எதிர்பார்த்திராத ஆட்சி ஒரு நாள் வரும், அது நிம்மதியான ஆட்சியாக அமையும். இந்தியாவிற்கு விரைவில் ஒரு அந்நியன், ஒரு இந்தியன் வருவான்.

மன்றம் 
சிலநேரங்களில் தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு முட்டாளாக இருகிறார்கள் என்று தோன்றுகிறது.. நடிகைக்கு கோவில், நடிகனுக்கு மன்றங்கள், பாலாபிஷேகம், அடிதடி என்று தனக்கு தானே சண்டை போட்டு கொண்டு கேவலபடுத்தி கொள்கிறார்கள். இந்த மாதிரி அடுத்தவனுக்காக வெட்டியாக வேலை செய்யும் இவர்கள் குடும்பத்தை யாரும் பார்ப்பதில்லை.  நடிகர்கள் நமக்காக கஷ்டப்பட்டு சம்பளம் வாங்காமல் நடிகிறார்களா? இல்லை, அவன் வாங்கும் சம்பளத்திற்கு நடிக்கிறான். இதற்கு இத்தனை ஆர்பாட்டங்கள். ரசிகர் மன்றம் வைத்து பொதுமக்களுக்கு உதவி செய்வதை விட, பொதுவான பெயரில் செய்யலாமே!! இந்த முட்டாள் தனம் என்று மாறும்.?

நான் தி.மு.கா-வை வெறுப்பவளோ, அ.தி.மு.க-வை ஆதரிப்பவளோ அல்ல… என்னைப் பொறுத்தவரை, ஒரு அரசியல்வாதி என்பவர், மக்கள் நலனை கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும்… தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் மக்கள் பிரதிநிதியாக மக்களை மனதில் வைத்து சிந்திக்க வேண்டும்… ‘ஐயா’ செய்தாறா என்று தெரியாது. எனக்கு அதைப் பற்றி எழுத உரிமையில்லை. ‘அம்மா’ எந்த அளவு செய்தார், செய்வார் என்றும் எனக்கு தெரியாது. ஆனால் அரசியலுக்கு வருபவர்கள் மக்களுக்கு நல்லது செய்தலே போதும். எந்த விளம்பரமும் இல்லாமல் இவர்கள் கொடி ஏழேழு  தலைமுறைகளை தாண்டி பறக்கும்.

இறக்குமதி 
வெளிநாட்டு பொருட்களை விற்க உள்நாட்டில் அனுமதிப்பதால், உள்நாட்டில் இருந்து தயாராகும் பொருள்கள் பெருமளவு தயாரிப்பில் சரிந்து விடுகிறது. இதனால் தேவையில்லாமல் விலைவாசி உயர்வு தான் மிச்சம். குறைந்த விலையில் கிடைகிறது என்று வாங்கி கொள்வதால் தான் நிறைய சீன பொருள்கள் இறக்குமதி  செய்யபடுகிறது  இதனால் நம் இந்திய சந்தை விழ்ச்சி அடைகிறது. இதை யோசித்து பார்க்கிறதா  நம் நாடு?

சில கடைகளில்  அதிகபட்ச விலையை அதாவது MRP விட 2 ரூபாய் அதிகமாக விற்கின்றனர். என்  அகராதியில் இவர்கள் கௌரவ பிச்சைகாரர்கள், பிச்சையை கேட்டு வாங்குபவர்கள் என்று சொல்லுவேன். கடைகாரர்கள் மொத்தமாக வாங்கும் போது குறைவான விலையில் தான் வாங்கி வருகின்றனர், பிறகு எதற்கு இந்த அதிகபட்ச விலை.?

பொதுமக்கள்:
பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பது, கண்ட இடங்களில் எச்சில் துப்புவது இல்லை, கேடு விளைவிக்கும் பாக்குகளை போடுவது, அதை போட்டாலும் அலுவகங்கள், இரயில் வண்டி ஜன்னலில், பேருந்து மேல், உட்காரும் நிழற்குடை அருகில் துப்புவது கிடையாது. குடித்து விட்டு நடுரோட்டிலும், சிறுநீர் கழித்த இடத்தில் விழுந்து கிடக்காமல், பொது இடத்தில பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை போடாமலும், இருக்கும் தமிழ்மக்களே உங்களை என்ன சொல்லுவது? என்னவோ ராக்கெட் விடுவதற்கு போவது போல அவசரமா அவசரமா போறீங்க, அப்படி என்ன தான் செய்ய போறிங்களோ? உங்களை விட வெளிநாட்டில் அவசரமாக இருப்பவர்கள் கூட பொது இடத்தில எப்படி இருக்க வேண்டும், எப்படி பாதுகாக்க வேண்டும் என்று கருத்தாக உள்ளனர். அதனால் தான் அந்த நாடுகள் முன்னேறி கொண்டிருகிறது. நாம் அடுத்தவனை பார்த்து பொறாமையும், கீழ்த்தரமான விஷங்கள் செய்கிறோம். இங்கு சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளின் மெத்தனத்தாலும் சுகாதாரம் இல்லாமல், போய் கொண்டிருக்கிறோம். நாட்டுக்கு எது தேவை என்று நாட்டை ஆளும் அதிகாரிக்கும் தெரியவில்லை, மக்களுக்கும் தெரியவில்லை. என்று தீரும் இந்த -----------??





Image by FlamingText.com


0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog