Pages

Subscribe:

Tuesday, July 10, 2012

இந்த கால கல்வி!

இந்த காலத்து ஆசிரியர்களுக்கு என்ன தெரிந்திருகிறது என்று அவர்களுக்கே தெரியவில்லை. இது தான் இன்றைய நிலைமை.
மேலோட்டமாக படித்துவிட்டு சொல்லித்தரும் ஆசிரியர்கள் தான் அதிகம். என்ன தான் தனியார் பள்ளியில் படித்தாலும் Tuition அனுப்ப வேண்டிய கட்டாய நிலைமை, அப்படி இருக்க பள்ளியில் ஆசிரியர்கள் என்ன செய்துகொண்டிருகிறார்கள்.

அந்த காலத்து படிப்பை படித்தவர்கள் தான் இன்று பெரிய மேதைகளாகவும், அறிஞர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், இருகிறார்கள். ஆனால் இன்று சொல்லித்தரும் வெறும் சிந்தனை திறன் இல்லாத ஆங்கிலம் மட்டும் சொல்லி தருகின்றனர் இன்றைய ஆசிரியர்கள். பெரும்பாலும் தனியார் நிறுவனமே இந்த வகையில் இருக்கிறது. ஒரு மனிதனுக்கு என்ன தேவை, எப்படி வாழவேண்டும், நம் கலாச்சாரம் என்ன? இதையெல்லாம் சொல்லி தர மறந்துவிடுகின்றார்கள். அவர்களுக்கே அது தெரியாத பட்சத்தில் எப்படி சொல்லி தருவார்கள் என்று நினைக்க தோன்றுகிறது. இதனால் தான் சில பள்ளிகளில் தவறான நிகழ்வுகளும், பாலியல் தொல்லைகளிலும் ஆளாகபடுகிறர்கள். மாணவர்கள் படிக்கும் போதே தவறான பாதையில் செல்ல இன்றையகால படிப்பு இருக்கிறது.

அந்த காலத்து கல்விக்கு, இன்றைய கல்வி கால் தூசிக்கு சமம். படிப்பை திணிக்கபடுகிறது இந்த காலத்து கல்விகள். இதனால் சிறுவயதில் இருந்தே மனஉளைச்சலுக்கு ஆளாக்கபடுகிறார்கள். ஒரு தரமான களவியல் மட்டுமே வருங்காலத்தை செழிப்பாக மாற்ற முடியும். அதற்கு தரமான ஆசிரியர்கள் தேவை.

கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தாலே உயர் ரக கல்வி வரை அனைவரும் இலவசமாக கல்விப்பெற முடியும்!

குறைந்த கட்டண நிர்ணயம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு என்பதெல்லாம் இருக்கின்ற அரசுப் பள்ளிகளிலும் ஒழித்து தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கவே, தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக புகுத்தப்பட்டுவரும் மறுகாலனியாக்க கொள்கையின் ஒரு பகுதியே கல்வியில் தனியார்மயம் கடைச்சரக்காக மாற்றிவிட்டது என்ற உண்மையை உறக்க ஒலிக்கவும்.

தனியார் கல்வி நிறுவனங்கள் தான் தரமான உயர்ரக கல்வியைத் தருகின்றன. எனவே, இங்கே நம் பிள்ளைகளை படிக்க விபத்தால் நல்லா வேலைக்குப் போக முடியும், அதிக சம்பளம் கிடைக்கும். அதற்காக கடனையோ உடனையோ வாங்கி படிக்க வைக்க வேண்டும் என்ற கனவுடன் சாதாரண உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பல Convent-களில் சேர்கிறார்கள். சில லட்சங்களை கொடுக்க "தரமான' தனியார் பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைக்கின்றனர்.

இவர்களின் நோக்கம் தரமான கல்விச் சேவையை வழங்குவதல்ல, கொள்ளை லாபம் அடிப்பதுதான். இவர்கள் contract முறையில் தகுதியற்ற ஆசிரியர்களை அமர்த்திக் கொண்டு நவீன கட்டுமான வசதிகள், ஆய்வுக் கூடங்கள், கற்பிக்கும் முறைகள் இருபதாக விளம்பரம் செய்கின்றனர்.

  • தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்குவோம்!
  • ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி தேர்வுமுறை, ஒரே வசதிகள் கொண்ட பொதுப்பள்ளி, அருகமைப் பள்ளிமுரையை நிலை நாட்டுவோம்!

Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog