
தேவையான பொருட்கள்:
முட்டை - 4
கார்ன் ப்ளார் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - 1/2 கட்டு
பிரட் தூள் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் முட்டையை வேக வைத்துக் கொள்ளவும். முட்டை வெந்த பிறகு ஓட்டை அகற்றி, அதனை நீளவாக்கில் இரண்டாக வெட்டி தனியே வைத்துக் கொள்ளவும்.
* பிறகு பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* பின் ஒரு பாத்திரத்தில் கார்ன் ப்ளார், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
* பின்பு அதில் அரை கப் தண்ணீரை விட்டு, கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
* இப்போது ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு, காய வைத்துக் கொள்ளவும்.
* பிறகு வெட்டி வைத்துள்ள அந்த முட்டையை கலவையில் நனைத்து, பின் பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
* இப்போது சுவையான முட்டை சாப்ஸ் ரெடி!!! இதனை தக்காளி சாஸ்-உடன் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.


0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments