Pages

Subscribe:

Monday, July 30, 2012

கருமையான முடி

கூந்தல் கருமை நிறத்தை இழப்பதற்கு, கூந்தலுக்குத் தேவையான சத்துக்கள் சரியாக கிடைக்காததே ஆகும். மேலும் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளர்வதற்கு முறையான கூந்தல் பராமரிப்பும் இல்லாததாகும். அழகாக இருக்க, எவ்வாறு முகத்திற்கு அத்தனை மேக்கப் செய்கிறோம். அந்த அழகு முகத்தில் மட்டும் காணப்படுவதில்லை, கூந்தலிலும் தான் இருக்கிறது. அத்தகைய கூந்தல் நன்கு கருமையாக வளர்வதற்கு எங்கும் செல்ல வேண்டாம், அதற்கு மருந்தான எண்ணெய் வீட்டிலேயே இருக்கிறது.

* ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன், 10 செம்பருத்தி பூக்களை போட்டு, அந்த எண்ணெயை வெயிலில் வைத்து, பூவானது எண்ணெயில் முழுவதும் மூழ்கும் வரை வைக்கவும். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு சூடேற்றி, பின் குளிர்ந்ததும், ஒரு நாள் விட்டு அதனை கூந்தலுக்கு தடவி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து கூந்தலுக்கு தடவி வந்தால், கூந்தல் நன்கு கருமையாக வளர்வதோடு, அடர்த்தியாகவும் வளரும்.

* ஒரு பௌலில் தண்ணீரை விட்டு லேசாக சூடேற்றி, அதில் 100 மல்லிகைப் பூக்களை போட்டு, இரண்டு நாட்கள் மூடி ஊற வைக்கவும். இரண்டு நாட்கள் கழித்து, அந்த தண்ணீரை பார்த்தால், தண்ணீரின் மேல் ஒருவித எண்ணெய் போன்ற பொருள் மிதக்கும். பின்னர் அந்த பூக்களை வெளியே போட்டு, அந்த எண்ணெயை தினமும் படுக்கும் முன் கூந்தலுக்கு தடவி, மறுநாள் கூந்தலை அலசி வரவும். இது ஒரு சிறந்த ஹேர் அரோமா தெரபி போல் இருக்கும். இதனால் கூந்தலானது பட்டுப்போல் மின்னுவதோடு, அதிலிருந்து வரும் வாசனை தலைவலியை சரிசெய்யும்.

* இரவில் படுக்கும் முன், பத்து நெல்லிக்காயை 1 லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஊற வைக்கவும். பின்பு அதனை மறுநாள் காலையில் கொதிக்க வைத்து, சூடானது ஆறியதும், அந்த எண்ணெயை வாரத்திற்கு மூன்று முறை தடவ வேண்டும். நெல்லி ஒரு சிறந்த சுத்தப்படுத்தி, அதிலும் இது கூந்தலுக்கு நல்ல நிறத்தை தரும். மேலும் இது கூந்தலுக்கு ஒரு நல்ல தரத்தையும் தரும்.

* செம்பருத்திப் பூ, மருதாணி இலைகள், கறிவேப்பிலை இலைகள், கசகசா இலைகள் நீரில் ஊற வைத்தது, வேப்பிலை, வெந்தயம் போன்றவற்றை நன்கு காய வைத்து, அதனை அரைத்து, உருண்டைகள் போல் செய்து, நல்லெண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை தேய்த்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாகவும், கருமையாகவும் வளரும்.
மேலே சொன்ன அனைத்து எண்ணெய்களையும் இரவில் படுக்கும் முன்பு பயன்படுத்த வேண்டும்.



Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog