Pages

Subscribe:

Thursday, June 6, 2013

செட்டிநாடு மிளகு சிக்கன் வறுவல்

தேவையான பொருட்கள்:

  1. சிக்கன் - 1/2 கிலோ
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
  5. தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
  6. மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
  7. மிளுகுத்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
  8. சோம்பு - 1 டீஸ்பூன்
  9. கறிவேப்பிலை -சிறிது
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு
தாளிக்க
  • பட்டை – 3 துண்டு
  • கிராம்பு  – 3
  • ஏலக்காய் – 3
  • பிரியாணி இலை  -  1
  • கருவேப்பிலை  – சிறிது
  • சோம்பு  – 1 தேக்கரண்டி

செய்முறை :  
  • சிக்கனில் 1  மேசைக்கரண்டி மிளகாய்த்தூள், 1  தேக்கரண்டி மஞ்சள்தூள், பாதி இஞ்சி, பூண்டு விழுது, பாதி உப்பு  சேர்த்து 30  நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
  • கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடு செய்து, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
  • பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
  • மீதமுள்ள இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின் தக்காளி சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும். பின் மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் 1 /4 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு, மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  • எண்ணெய் பிரிந்து மேலே வரும்போது, சிக்கன் துண்டுகளைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • மீதமுள்ள உப்பு சேர்த்து மூடி போட்டு 8 – 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  • சிக்கன் வெந்தவுடன் மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, இறக்கவும்.
  • கடைசியாக எலுமிச்சம்பழ சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.

Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog