Pages

Subscribe:

Thursday, June 6, 2013

சிக்கன் பிரியாணி - Chicken Briyani

தேவையான பொருட்கள்

  1. சிக்கன் - 1/2 கிலோ 
  2. பாஸ்மதி அரிசி - 4 கப் 
  3. வெங்காயம் - 2 பெரியது 
  4. தக்காளி - 3 
  5. பச்சை மிளகாய் - 6 
  6. புதினா - 1 கட்டு 
  7. கொத்தமல்லி - 1 கட்டு 
  8. மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன் 
  9. மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன் 
  10. பிரியாணி மசாலா பொடி - 1 டேபிள்ஸ்பூன் 
  11. தயிர் - 250 கிராம் 
  12. பட்டர் - 100 கிராம் 
  13. உப்பு+எண்ணெய் = தேவைக்கு 
  14. தேங்காய் - 1/2 மூடி 
  15. இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள்ஸ்பூன் 
  16. இஞ்சி - 1 துண்டு 
  17. எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க
  • பட்டை - 1 துண்டு 
  • கிராம்பு - 4 
  • ஏலக்காய் - 3 
  • பிரிஞ்சி இலை - 4

செய்முறை :    
  • சிக்கனை சுத்தம் செய்து பாதி தயிர், பிரியாணிமசாலாபொடி, கொஞ்சம் உப்பு சேர்த்து கலந்து ஊறவிடவும்.
  • (வெங்காயம், தக்காளி) நீளவாக்கில் அரியவும்.பச்சை மிளகாயை கீறவும்.
  • (புதினா, கொத்தமல்லி) சுத்தம் செய்து வைக்கவும். 
  • அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
  • தேங்காயை துருவி அதனுடன் 1 துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து 3 கப் அளவில் பால் எடுக்கவும்.
  • குக்கரில் பட்டர் அல்லது எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களை(கிராம்பு - 4, ஏலக்காய் - 3, பிரிஞ்சி இலை - 4)போட்டு தாளிக்கவும்.
  • பின் வெங்காயம், இஞ்சி, பூண்டுவிழுது, தக்காளி, பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லி என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.
  • வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், ஊறவிட்டசிக்கன் இவைகளைப் போட்டு வதக்கவும்.
  • 1 கப் அரிசிக்கு =1 1/2 கப் தண்ணீர் அளவு, ஆக மொத்தம் 6 கப் தண்ணீர் அளவு.
  • சிக்கன் பாதி வதங்கியதும் 3 கப் தேங்காய்ப்பால்+3 கப் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை சாறு + அரிசி(தண்ணீயை வடிக்கட்டவும்) + உப்பு சரி பார்த்து சேர்க்கவும்.
  • குக்கரை மூடி,ஆவி வந்ததும் வெயிட் போட்டு 10 நிமிடம் அல்லது 3 விசில் வந்ததும் அடுப்பை அனைக்கவும்.
  • ப்ரெஷர் அடங்கியதும் சாதத்தை உடையாமல் கிளறி பரிமாறவும்.

Tips: சிக்கன் வேகும் போது நீர் விடும் , அதனால் அரிசிக்கு தண்ணீர் வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

அரிசி போட்டு வேக வைக்கும் போது ஒரு விசிலுக்கு மேல் விடக்கூடாது அதே போல் நெருப்பும் குறைந்த அளவில் இருக்க வேண்டும் , இல்லா விட்டால் சாதம் குழைந்து விடும்.

Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog